MARC காட்சி

Back
திருவிடந்தை நித்தியக் கல்யாணப் பெருமாள் கோயில்
245 : _ _ |a திருவிடந்தை நித்தியக் கல்யாணப் பெருமாள் கோயில் -
246 : _ _ |a திருவிடவெந்தை
520 : _ _ |a இந்த வராஹ மூர்த்தியை மாமல்லபுரத்திலிருந்து அரிகேசரிவர்மன் என்னும் மன்னன் தினமும் வந்து வணங்கிசென்று கொண்டிருந்தான். இம்மன்னன் தன் பொருட்டு தினமும் 12 மைல் வந்து சேவித்துச் செல்வதைக்கண்ட எம்பெருமான் இவனது கனவில் தோன்றி உனக்காக மாமல்லையில் எழுந்தருளுகிறேன் என்று சொல்லி பிராட்டியை வலப்பக்கத்தில் வைத்துக் கொண்டு எழுந்தருளினார். இக்கோவில் மாமல்லபுரத்தில் கலங்கரை விளக்கத்திற்கு செல்லும் பாதையின் ஓர்பால் அமைந்துள்ளது. இப்பெருமானைக்கூட திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். 360 கன்னியரை ஒன்றாக்கி ஒரே பெண்ணாகச் செய்தமையால் இங்குள்ள பிராட்டிக்கு அகிலவல்லி நாச்சியார் என்று பெயரும் உண்டு. தினமும் ஒரு திருமணம் செய்து கொண்டதால் பெருமாளுக்கு நித்ய கல்யாணப் பெருமாள் என்றும் ஊருக்கு நித்ய கல்யாணபுரி என்றும் பெயராயிற்று. வராக அவதாரம் எடுத்தமையால் வராகபுரி என்னும் பெயருண்டு. அசுரகுல கால நல்லூர் என்பதே கல்வெட்டுகளில் காணப்படும் பெயர். ஸ்ரீயின் அவதார ஸ்தலமாதலால் ஸ்ரீபுரி என்றும் இந்த ஊருக்கு நான்கு பெயர்கள் உண்டு. 360 கன்னியரில் முதற்கன்னிக்கு கோமளவல்லி என்பது பெயர். இங்கு தனிக் கோயிலில் உள்ள தாயாருக்கு கோமளவல்லி நாச்சியார் என்பதே திருநாமம். நித்ய கல்யாண அவதாரத்தில் எழுந்தருளியிருப்பதாக ஐதீஹம். இவ்விருவர் திருமேனியில் (முகத்தில்) தாடையில் பொட்டு இயற்கையாகவே அமைந்திருப்பது கண்கூடு. இந்தப் பொட்டு திருமகள் திருமண வைபவத்தை நினைவு கூறும் நிகழ்ச்சியாகும். இங்கு பெருமாள் எழுந்தருளியுள்ள முறை மிகச் சிறப்பான ஒன்றாகும். ஒரு திருவடி பூமியிலும் மற்றொன்று ஆதிசேடனும் அவன் பத்தினியான இருவர் முடியிலும் வைத்துக்கொண்டு, அகிலவல்லி நாச்சியாரை இடது தொடையில் தாங்கிக்கொண்டு, சரம ஸ்லோகத்தை உபதேசிக்கும் வராஹ மூர்த்தியாய் நின்றிலங்குகிறார். யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட பல்லக்கு ஒன்றுஇக்கோவிலில் உள்ளது. கொச்சி மகாராஜாவின் அரண்மனையில் ஒன்றும், இங்கொன்றுமாக இந்தியாவிலேயே இந்த இரண்டு யானைத் தந்த பல்லக்குகள்தான் உள்ளதென தொல்பொருள் ஆய்வுத்துறையினர் கூறுகின்றனர். திருமங்கையாழ்வாரால் மட்டும் 13 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்டதலம். மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்துள்ளார். இன்று சிறப்புற்றிருக்கும் கோவளம் என்பதே ஒரு காலத்தில் பிராட்டியின் அவதார மகிமையைக் குறிக்கும் முகத்தான் கோமளவல்லிபுரம் என்று வழங்கப்பட்டதாகும். இங்குதான் காலவரிஷி தவம் புரிந்தார். எம்பெருமான் 360 கன்னிகைகளை இரண்டு கன்னிகளாக்கி ஏற்றுக் கொண்டார் என்றும் சொல்வர். ஒருவர் கோமளவல்லி (தனிக் கோவில் நாச்சியார்) இன்னொருவர் அகிலவல்லி, இத்திருநாமத்தில் அனைத்து ஜீவராசிகளும் அடங்கி விட்டதாக ஒரு ஐதீஹம். ஒவ்வொரு தினமும் அவர் திருமணம் கொண்டதும் ஓர் அடையாளம். அதாவது பிறக்கும் உயிர்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வினாடியிலும் ஏற்று அவைகட்கு நாயகனாக அருள்புரிகிறார் என்பதும் ஐதீஹம். (அதாவது நாமெல்லாம்நாயகி போன்றும் எம்பெருமான் ஒருவரே நாயகன் என்றும் சொல்லும் வைணவக் கொள்கை ஈண்டு நோக்கத்தக்கது) நித்ய கல்யாணப் பெருமாள் எழுந்தருளியிருக்கும் இத்தலத்தில் மணமாகாத ஆண்களும் பெண்களும் திருமணத்தின் பொருட்டு வேண்டிச் செல்வர் அவர்கட்கு திருமணம் நடைபெறுவதும் கண்கூடு. திருவிடவெந்தை எம்பெருமானைப் பற்றி தமது 108 திருப்பதியந்தாதியில் பிள்ளைப் பெருமாளைய்யங்கார் கூறுகிறார்.
653 : _ _ |a கோயில், வைணவம், பெருமாள், மங்களாசாசனம், திவ்யதேசம், திருமங்கையாழ்வார், திருவிடந்தை, திருவிடவெந்தை, நித்தியக் கல்யாணப் பெருமாள் கோயில், மல்லை, கடல் மல்லை, மாமல்லபுரம்
700 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
905 : _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு / பல்லவர், சோழர், பாண்டியர், விசயநகர-நாயக்கர்
909 : _ _ |a 2
910 : _ _ |a 1200 ஆண்டுகள் பழமையானது. திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற திருப்பதி.
914 : _ _ |a 12.76246928
915 : _ _ |a 80.24298499
916 : _ _ |a லட்சுமி வராஹப் பெருமாள்
917 : _ _ |a நித்ய கல்யாணப் பெருமாள்
918 : _ _ |a கோமளவல்லி நாச்சியார்
923 : _ _ |a வராஹதீர்த்தம், கல்யாண தீர்த்தம்
925 : _ _ |a நான்கு கால பூசை
926 : _ _ |a வைகுண்ட ஏகாதசி, இராமநவமி
927 : _ _ |a கி.பி. 1052 ஆம் ஆண்டில் விஜய ராஜேந்திர தேவ சோழனின் 35வது ஆட்சியாண்டில்    இக்கிராமம்    இப்பெருமாளுக்கே தேவதானமாய்த் தரப்பட்ட செய்தியை ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து கலியாண திருவிடவெந்தை தேவர்க்கு நித்திய சிறப்புக்கும்... நாம் பிறந்த பூர நாளால் திங்கள் தோறும் திருவிழா உள்ளிட்டு வேண்டும்     நிபந்தனைகளுக்கும்.. யாண்டு முப்பத்தைந்தாவது முதல் தேவதான இறையிலியாக ... கொடுக்க வென்று திருவாய் மொழிந்தருளினாரென்று திருவோலை கூறுகிறது. மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் இயங்கும் இத்தலத்தின் (SSI 258 of 1910) கல்வெட்டு – செய்தியைக் கூறுகிறது. முதல் ராஜராஜசோழன் ராஜராஜசோழத் தேவர், குலோத்துங்க சோழன் போன்றோர் இங்கு கைங்கர்யம் செய்து, இவர்கள் தொடர்பான கல்வெட்டுகளும் காணப்படுவதால் இது ஒரு காலத்தில் சோழநாட்டுக்கு அடங்கிய பகுதியாகும், சோணாட்டுத் திருப்பதியாகவும் விளங்கி இருத்தல் வேண்டும். கலிச்சிங்கன் என்ற பெயரில் திருமங்கையாழ்வாருக்கு இங்கு ஒருமடம் இருந்த செய்தியும் கல்வெட்டால் அறிய முடிகிறது. இது மிகவும் தொன்மையான மடம்.  லையாளத்திலிருந்து யாத்திரையாக வந்த சில வியாபாரிகள் இத்தலத்தின் தீப கைங்கர்யத்திற்கு பொன் அளித்த செய்தியும் கல்வெட்டால் அறியப்படுகிறது. யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட    பல்லக்கு ஒன்று இக்கோவிலில் உள்ளது. கொச்சி மகாராஜாவின் அரண்மனையில் ஒன்றும், இங்கொன்றுமாக இந்தியாவிலேயே இந்த இரண்டு யானைத் தந்த பல்லக்குகள்தான் உள்ளதென தொல்பொருள் ஆய்வுத்துறையினர் கூறுகின்றனர்.
928 : _ _ |a இல்லை
930 : _ _ |a முன்னொரு யுகத்தில் (கிரேதா) மேகநாதன் என்னும் அரசன் இருந்தான். அவன் புதல்வன் பலி மிகவும் நீதிமானாக செங்கோலோச்சி வந்தான். அக்காலத்தில்மாலி, மால்யவான், ஸு மாலி என்னும் மூன்று அரக்கர்கள் தேவர்களுடன் யுத்தம் செய்யபலியின் உதவியைக் கேட்டனர் பலி மறுத்தான். அரக்கர்கள் தேவர்களோடு யுத்தம் செய்து தோற்றுப் போய் மீண்டும் பலியிடமே தஞ்சம் புகுந்தனர். அரக்கர்களின் பொருட்டு பலி தேவர்களுடன் யுத்தம் செய்து வென்றான். தேவர்களைக் கொன்ற பாவம் போவதற்காக இவ்விடத்து வந்து தேவர்கள் தலைவன் திருமாலைக் குறித்து கடுந்தவம் செய்தான். தவத்தில் மகிழ்ந்த விஷ்ணு, வராஹரூபியாய் அவனுக்கு காட்சிகொடுத்து மோட்சம் நல்கி சக்திவாய்ந்த வராஹ மூர்த்தியாய் இங்குள்ள வராஹ குளத்தில் நின்றருளினார். இஃதிவ்வாறிருக்க சரஸ்வதி நதிக்கரையில் குனிஎன்னும் ஒருரிஷி தவஞ்செய்து சுவர்க்கம் பெற்றார். குனியின் மகளும் அவ்விதமே சுவர்க்கம் செல்ல எண்ணி தவஞ்செய்யுங்காலை, நாரதர் வந்து, நீ மணமாகாதவள் மணஞ்செய்தாலன்றி சுவர்க்கம் சித்திக்காது என்று சொல்லி, அங்கு தவஞ்செய்துகொண்டிருந்த மற்ற ரிஷிகளிடம் இப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளுமாறு நாரதர் வேண்டினார். அம்முனிவர்களுள் காலவரிஷி என்பார் அப்பெண்ணைத் திருமணஞ்செய்துகொண்டு ஓராண்டில் 360 கன்னிகைகளை (பெரிய பிராட்டியார் அம்சமாக)பெற்றார். இவ்விதம் 360 கன்னிகைகள் தமக்குப் பிறந்ததை ஞான திருஷ்டியால் உணர்ந்த முனிவர் இது இறைவன் செயலே என்று எண்ணி அத்தனைபேரையும் கிருஷ்ணார்ப்பணம் என்று கிருஷ்ணருக்கே அர்ப்பணித்துவிட தமக்குள் தீர்மானித்திருந்தார். பருவமடைந்த இவர்களை திருமணஞ்செய்து கொடுக்கத் திண்டாடிக் கொண்டிருந்த வேளையில், சரஸ்வதியில் தீர்த்தாடனம் செய்ய வடதேச யாத்திரை சென்ற சிலர் இவ்விபரந் தெரிந்து காலவரிஷியை அணுகி தமது நாடாகிய வாமகவிபுரி என்னும் ஊருக்கு வருமாறும் அங்கு எழுந்தருளியுள்ள வராஹமூர்த்தி மிகப்பெரியவரப்பிரசாதி யென்றும், தெய்வத்தால்தான் இக்காரியம் நடக்க வேண்டுமென்று சொல்ல அவரும் இசைந்து இங்குவந்த வராஹமூர்த்தியைக் கருதி கடுந்தவஞ் செய்து வரலாயினார். இவரின் தவத்தை மெச்சிய ஸ்ரீமந் நாராயணன் ஒரு பிரம்மச்சாரி வடிவில் வந்து இம்முனிவரை அணுகி தான் திவ்யதேச யாத்திரையாக வந்ததாக கூற, காலவரிஷி தனது நிலையை எடுத்துரைத்து தனது பெண்களை திருமணம் செய்து தங்களின் பிரம்மச்சரிய விரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று மன்றாட ஸ்ரீமந்நாராயணனும் அதற்கு ஒப்புக்கொண்டு தினம் ஒரு கன்னிகையாக 360 பெண்களையும் திருமணம் செய்து கொண்டார். கடைசி தினத்தில் எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க 360 கன்னியர்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே பெண்ணாக்கி தனதுஇடப்பக்கத்தில் வைத்துக்கொண்டு வராஹ ரூபியாக சேவை சாதித்தார். திருவாகிய இலக்குமியை இடப்புறம் ஏற்றுக்கொண்ட எம்பெருமான் ஆன படியால் திரு+இட+எந்தை திருவிடவெந்தையாயிற்று, காலப்போக்கில் மருவி திருவடந்தை ஆயிற்று.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a மாமல்லை ஜலசயனப் பெருமாள் கோயில், மாமல்லபுரம் குடைவரைகள், சாளுவன்குப்பம் முருகன் கோயில், புலிக்குகை, கடற்கரை கோயில்
935 : _ _ |a திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில் கோவளத்திற்கு அடுத்த ஊராக அமைந்துள்ளது. மிகச்சிறிய கிராமமாக இருந்தாலும் எழில் கொஞ்சும் இயற்கைச் சூழல் நிறைந்திருப்பதாகும். மாமல்லபுரத்திலிருந்து சுமார் 12 மைல் தூரத்தில் அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை
937 : _ _ |a திருவிடந்தை
938 : _ _ |a காஞ்சிபுரம்
939 : _ _ |a சென்னை - மீனம்பாக்கம்
940 : _ _ |a மாமல்லபுரம் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000192
barcode : TVA_TEM_000192
book category : வைணவம்
cover images TVA_TEM_000192/TVA_TEM_000192_திருவிடந்தை_நித்திய-கல்யாணப்பெருமாள்-கோயில்-0001.jpg :
Primary File :

cg103v093.mp4

TVA_TEM_000192/TVA_TEM_000192_திருவிடந்தை_நித்திய-கல்யாணப்பெருமாள்-கோயில்-0001.jpg

TVA_TEM_000192/TVA_TEM_000192_திருவிடந்தை_நித்திய-கல்யாணப்பெருமாள்-கோயில்-0002.jpg